தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியான 3 கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார்.
இன்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு வெளியான இந்த அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ₹10,000 கருணைத் தொகை வழங்கப்படும் என்றும், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்து அதிரடி காட்டியுள்ளார்.
இந்த ‘மெகா’ வாக்குறுதிகளை வெறும் பேப்பர் அளவில் மட்டும் வைக்காமல், வார்டு வாரியாக பட்டிதொட்டியெங்கும் உள்ள சாமானிய மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக-வின் இந்த பணமழை வாக்குறுதிகள் தற்போதே அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், மற்ற கட்சிகளையும் யோசிக்க வைத்துள்ளது.