ஓம் சக்தி, பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி - தஞ்சையில் தவெக விஜய் பேச்சு..!
Top Tamil News March 05, 2026 05:48 AM

தஞ்சாவூரில் செங்கிப்பட்டி பகுதியில் தவெக நிர்வாகிகள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:

சின்னப் பிள்ளைகள் எல்லாம் சொல்கிறார்கள். ஓம் சக்தி, பராசக்தி.. திமுக ஒரு தீய சக்தி. திமுக என்பது வொர்க் அவுட் ஆகாது. எனக்கும் என் மக்களுக்கும் இடையில் யாராலும் நுழைய முடியாது. தமிழ்நாடு வெர்சஸ் ஸ்டாலின், விஜய் வெர்சஸ் ஸ்டாலின் என்றுதான் களம் இருக்கிறது.

சென்னையில் தில்லி தில்லி எனக் கூறுகிறார்கள், ரைடு வந்தால் தில்லிக்கு வெள்ளை கொடி பிடிக்கிறார்கள்.கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தேர்தலில் விசில் போடப் போவது தவெக. அனைத்து அணிகளையும் திமுக அடித்து நொறுக்கும்.

எனக்கும் என்னுடைய மக்களுக்கு நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.

இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள்தானே? நிஜமாகவே ஒரு வாய்ப்பு அளிப்பீர்கள்தானே.. விஜயை நம்புகிறீர்கள்தானே. ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும்தானே?’’ என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.