சமையல் சரியில்லை என்று மாமியார் திட்டியதால்.. பெண் சாப்ட்வேர் இஞ்சினியர் எடுத்த விபரீத முடிவு..!
Webdunia Tamil March 05, 2026 06:48 AM

பெங்களூருவில் ஒரு வார இடைவெளியில் இரண்டு பெண் மென்பொருள் பொறியாளர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

35 வயதான சுஷ்மா என்ற பொறியாளர், தனது மாமியாருடன் ஏற்பட்ட சமையல் தொடர்பான தகராறு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார். இது குறித்து சுஷ்மாவின் கணவர் புனீத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்; தலைமறைவான மாமியாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவத்தில், வித்யாஜோதி என்ற 27 வயது மென்பொருள் பொறியாளர், ஜாதக கணிப்பு காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இவருடைய திருமண வாழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிரிவு ஏற்படலாம் என்று ஜோதிடர் கணித்ததால், அதற்கான பரிகார பூஜையின் ஒன்பதாவது நாளில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த இரண்டு மரணங்களும் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெண்களின் மன அழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. சோலதேவனஹள்ளி மற்றும் பாகலககுண்டே காவல்துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.