அணு ஆயுத போட்டி காரணமாக இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்துகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் பிற முக்கியமான இடங்களில் ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்த போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் உள்ளவர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளது.

அதன்படி, டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு மையம், காலை 09 மணி முதல் இரவு 09 மணி வரை செயல்படும். வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிப்பவர்கள் 1800118797, 91 11 23012113, 91 1123014104, 91 1123017905 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கபட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய நிலவரத்தை தீவிரமாக கண்காணிக்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம், நாட்டு நலனுக்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளின் அரசுகளுடனும் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்துக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 05 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் - அமெரிக்காவின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள், தூதரகம்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் உருவாகியுள்ளது.இ தனால் பல நாடுகள் தங்களது வான்வெளியை மூடியுள்ளது. இதன் காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.