“விஜய் கூடவே இருப்பாரு…. ஆனா போட்டி போட மாட்டாரு” தமிழ்நாடு முஸ்லீம் லீக் போட்ட அதிரடி பிளான்….!!
SeithiSolai Tamil March 05, 2026 08:48 AM

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகரும் விஜய், தனது தவெக கட்சிக்காகப் பலமான கூட்டணிகளை எதிர்பார்க்கும் வேளையில், இதுவரை தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி மட்டுமே அவருடன் கைகோர்த்துள்ளது. அக்கட்சியின் தலைவர் முஸ்தபா, விஜய்யின் கொள்கைகளை ஆதரித்து பல்வேறு விவாத மேடைகளில் தவெகவிற்காகத் தீவிரமாகப் பேசி வருகிறார். விஜய்யின் நன்மதிப்பைப் பெற்றுள்ள முஸ்தபா, வரப்போகும் தேர்தலில் தானோ அல்லது தனது கட்சியோ போட்டியிடப் போவதில்லை என்ற அதிரடி முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய்யின் கரத்தை வலுப்படுத்த மட்டுமே தாங்கள் உடன் இருப்பதாகவும், சீட் எதிர்பார்ப்பு இல்லை என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மற்ற பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை இணையாத நிலையில், தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் சூழலே பிரகாசமாகத் தெரிகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.