தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் சுமார் 24,033 ஊழியர்களின் ஊதியத்தை தலா ₹1,000 உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய ஊதிய உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு கோரி வந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயர்வு மட்டுமின்றி, ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மற்றுமொரு முக்கிய அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ESI மருத்துவ மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவக் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த இரட்டை அறிவிப்பு டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.