திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்த திருச்சி மண்டல ரெயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு 'கர்தவ்ய த்வார்' என தெற்கு ரெயில்வே இந்தியில் பெயர் வைக்கப்பட்டது.
"கர்தவ்ய த்வார்" என்றால் தமிழில் "கடமையின் நுழைவுவாயில்" என பொருள். தெற்கு ரெயில்வேவின் இந்தச் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருச்சி மண்டல ரெயில்வே மேலாளர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழில் எழுதப்பட்ட இந்திப் பெயர் அகற்றப்பட்டது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''அகற்றப்பட்டது இந்தி எழுத்து மட்டுமல்ல, ஆதிக்க வெறியின் ஆணவமும் தான். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும், அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்.
டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு என்றுமே Out of Control'' என்று பதிவிட்டுள்ளார்.