கடகம்: `வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்; சவால்களில் வெற்றி!' | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
Vikatan March 05, 2026 07:48 AM
2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்கடகம்
கர்க்கடக ராசியைக் கடக ராசி என்பார்கள். அதிபதி சந்திரன். இங்கு குரு உச்சம் பெற்றிருப்பார். செவ்வாய் நீசம் பெற்றுவிடுவார். ஜாதகத்தில் உங்களுக்கு சனி சாதகமாக இருந்தால், தொழில் கல்வியில் சிறப்புறச் செய்து, செல்வச் செழிப்புடன் வாழ வைப்பார். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?

1. உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப்படி 9-ம் வீட்டில் ஆட்சி பெற்று வலுவாக அமர்கிறார் சனி பகவான். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. சவால்களில் வெற்றி பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

2. குடும்பத்தில் நல்லது நடக்கும். தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் மறையும். சிலருக்குச் சொந்தவீடு வாங்கும் பாக்கியம் உண்டு. பழைய கடனை அடைக்க, புது வழி பிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்னைகள் தீரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

3. பிள்ளைகள் வழியில், மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்தங்கள் மெச்சும்படி கல்யாணத்தை முடிப்பீர்கள்.

4. அதேபோல் சனி பகவான் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை பூரட்டாதியில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை யுயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். மகனுக்குத் திருமணத் தடை நீங்கும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

சனி பகவான்

5. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும் காலமான 2.4.2026 முதல் 14.4.2027 வரை வீண் அலைச்சல், விரயச் செலவுகள் வரக்கூடும். கவனம் தேவை. குடும்பத்தில் சிறிய பிரச்னைகளைப் பெரிதுப்படுத்த வேண்டாம். வழக்குகளில் கவனம் தேவை.

6. அதேநேரம், இந்த வருடத்தின் நிறைவில் சனி வக்ரத்தில் செல்வதால், எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால ஆதாயம் உண்டு.

7. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் செல்கிறார். இந்தக் காலக்கட்டத்தில் தடைப்பட்டிருந்த வீடுகட்டும் பணிகளை முழுமையாக முடிப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

2026: Dr.K.P.Vidhyadharan கணித்த (வாக்கிய) சனிப்பெயர்ச்சி - மீனம் ராசி பலன்கள்!

8. இந்தச் சனிப்பெயர்ச்சிக் காலத்தில் மீனத்தில் அமரும் சனீஸ்வரர், உங்கள் ராசிக்கு 3, 6 மற்றும் 11-ம் வீட்டைப் பார்ப்பதால், திட்டமிட்ட படி வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல் ஆரோக்கியம் நிம்மதி தரும். எதிர்பாராத பணவரவுகள் உண்டு. புதுச் சொத்து வாங்குவீர்கள்.

9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். அடகில் வைத்திருந்த தங்கத்தை மீட்டெடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

10. வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து கொள்முதல் செய்வது அவசியம். பாக்கிகளெல்லாம் இனி தானாக வந்து சேரும். சிலர், கடையை வேறிடத்திற்கு மாற்றுவார்கள். பங்குதார்களிடையே மனக் கசப்புகள் விலகும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாரம்பரிய உணவு வகைகளால் லாபம் உண்டு.

11. உத்தியோகஸ்தர்களுக்கு, உங்களைப் புரிந்துகொள்ளும் புதிய அதிகாரி வருவார். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, சலுகைகள் கிடைக்கும். கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கும்.

சனிப்பெயர்ச்சி: சக்தி விகடன் நடத்தும் அதிவிசேஷ வாராஹி ஹோமங்கள்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.