சங்கீதாவுடன் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனது எப்படி?.. வைரலாகும் விஜயின் பேட்டி!….
CineReporters Tamil March 05, 2026 06:48 AM

தமிழ் திரையுலகில் எம்ஜிஆர், ரஜினிக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள், ரசிகர்களை உருவாக்கியவர் விஜய். விஜய்க்கு அவரின் ரசிகர்கள் முதலில் இளைய தளபதி பட்டத்தை கொடுத்தனர்.. அதன்பின் தளபதியாக மாறினார் விஜய். மேலும், தன்னுடைய ரசிகர்களை நம்பித்தான் விஜய் தற்போது அரசியலுக்கும் வந்திருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் குறி வைத்திருக்கும் நிலையில் தவெக பொது கூட்டங்களில் திமுக எதிராக ஆவேசமாக பேசி வருகிறார்..

இந்நிலையில்தான் விஜயின் மனைவி சங்கீதா அவரிடமிருந்து விவாகரத்து கேட்டு சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு கொடுத்தார்.. அதில் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருப்பதாகவும், அவருடன் வாழ்ந்துவருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்..

வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி இந்த வழக்கு தொடர்பாக விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், சங்கீதாவோடு தனக்கு எப்படி திருமணம் நிச்சயமானது என்பது தொடர்பாக பல வருடங்களுக்கு முன்பு விஜய் கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..

அதில் பேசும் விஜய் நான் வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்றிருந்தபோது ஒரு முறை சங்கீதாவை சந்தித்தேன்.. அதன்பின் என் அப்பாவும் அம்மாவும் சங்கீதாவின் குடும்பத்தை சென்னைக்கு வரவழைத்து பேசினார்கள்.. அவர்கள் சென்ற பின் என் அப்பா என்னிடம் வந்து ‘சங்கீதா பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’… நீ சங்கீதாவை திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும்’ என்று சொன்னார். நான் ‘உங்கள் விருப்பம்’ என சொல்லிவிட்டேன்’ என அதில் விஜய் பேசியிருக்கிறார்..

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.