இன்னும் 3 நாட்களில் அதிமுகவிலிருந்து 80% பேர் திமுகவில் இணைவார்கள்- ஓபிஎஸ்
Top Tamil News March 05, 2026 05:48 AM

அடித்தள மக்களின் தேவைகளை அறிந்து, கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி நடத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே , மீண்டும் ஆட்சிக்கு வருவார் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் ராயபாளையம் என்ற பகுதியில், வருகிற 7 - ந் தேதி ஓ .பன்னீர்செல்வம் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு , திமுகவில் இணைப்பதற்கான மாநாடு நடைபெறுவதை ஒட்டி , இன்று அதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. அதற்கான பந்தல்கால் நடும் பணி நடைபெற்ற பின்பு, செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.

அப்போது பேசிய ஓபிஎஸ், “கடந்த ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில், அடித்தள மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு நல திட்டங்களையும் , மக்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து, ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடர்ந்து, தமிழகத்தை ஆட்சி நடத்துவார். வருகிற 7-ம் தேதி ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோரை திரட்டி மாநாடு நடத்த உள்ளதாகவும், அப்போது அதிமுகவிலிருந்து 80 சதவீத நபர்கள் திமுகவில் இணைவார்கள்” எனக் கூறினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.