ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் விநியோகம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவரும் நிலையில், ரேபிடோவும் தன் பங்குக்கு உணவு செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஓன்லி என்று இதற்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில், எந்த விதமான மறைமுகக் கட்டணமோ, கமிஷனோ வசூலிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மார்ச் 3ஆம் தேதி பெங்களூருவில் ஓன்லி (Ownly) சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தவரை அடுத்தகட்ட நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று ரேபிடோ அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஸ்ரேயா என்னும் பெங்களூரு பயனர், ஸ்விகி, ஸொமாட்டோ மற்றும் ஓன்லி ஆகியவற்றில் உணவுகளின் கட்டண விவரங்களை ஒப்பிட்டு சமூக வலைதளத்தில் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறி உள்ளதாவது:
அசல் விலையில் 50 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் டெலிவரி கட்டணமாக 54.77 ரூபாய் கூடுதலாகக் கேட்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நான் ரூ.180 செலுத்த வேண்டி இருந்தது.

பீட்சாவின் விலை 119 ரூபாய். பின்னர் 5.95 ஜிஎஸ்டி தொகை சேர்ந்து நான் 124.95 செலுத்த வேண்டும்.
ஸொமாட்டோவில் பேக்கேஜிங் கட்டணம், டெலிவரி கட்டணம், பிளாட்ஃபார்ம் கட்டணம், உணவு இந்தியா நன்கொடை மற்றும் பின்னர் ஜிஎஸ்டி ஆகியவை உள்ளன. இங்கே நான் 191.37 செலுத்த வேண்டி இருந்தது.
இது மூன்றையும் ஒப்பிடும்போது ஓன்லியின் விலை குறைவாகவே இருக்கிறது. நிச்சயமாக இந்த விலை வேறுபாடு நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும். ஆனால் இது நிலையானதாக இருக்குமா?’’ என்று ஸ்ரேயா கேள்வி எழுப்பி உள்ளார்.
Yesterday I was reading about Ownly, a food delivery app, started by Rapido.
— Shreya (@miless_15) March 4, 2026
- they claim to have no hidden charges.
-low commission from restaurant owners
- they already have a fleet.
So I checked the prices of corn pizza on Swiggy, Zomato and Ownly.
1. Swiggy:
There is a… pic.twitter.com/Ub2BXACGF2
ஆரம்பத்தில் எல்லா ஆன்லைன் உணவு டெலிவரி, போக்குவரத்து நிறுவனங்கள் குறைவான விலைக்கு இயங்கினாலும், நாட்கள் செல்லச் செல்ல விலையை மெல்ல மெல்ல உயர்த்திவிட்டன. இந்த நிலையில் ஓன்லி என்ன செய்யும் என்பதே எல்லோரின் கேள்வியாகவும் உள்ளது.