தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சமீபத்தில் திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அதிமுக கட்சியின் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். திமுக கட்சியின் சார்பில் போட்டியிடுவீர்களா என்று ஓபிஎஸ் அவர்களிடம் நிருபர்கள் கேட்டபோது முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது அவரது மகன் ரவீந்திரநாத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு. கொடுத்துள்ளார். அதாவது ஓபிஎஸ்-க்கு பதிலாக அவரது மகனுக்கு தேர்தலில் சீட்டு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் அதிமுக கட்சியில் பல தலைவர்கள் திமுகவில் இணைந்து தற்போது முக்கிய பொறுப்புகளில் நிர்வகிக்கும் நிலையில் ரவீந்திரநாத் அடுத்த தேர்தலில் போட்டியிட இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.