10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்க? உங்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்..
Top Tamil News March 06, 2026 10:48 PM

தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது,  பொதுத்தேர்வின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகைகளை தேர்வுத்துறை வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி,  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு  எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கி தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கூடுதல் நேரத்தை பயன்படுத்த விரும்பாத மாணவர்கள் 3 மணி நேரத்திற்கு பிறகு படிவத்தில் கையெழுத்திட்டு கிளம்பலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதல் சலுகை

1, மேலும், ஆறு வகையான மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு மட்டும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம், மொழிப்பாட விலக்கு உள்ளிட் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. 

2, கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், எதிர்பாராத விபத்துகளால் உடல் இயலாதோர்,  பாரிச வாயு போன்ற நோயால் எதிர்பாராத விதத்தில் கைமுழிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறையுடையோர், நரம்பியல் குறையுடையோர்  ஆகியோருக்கு சலுகை வழங்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

3. பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வு விலக்கு சலுகை வழங்கி வெளியிடப்பட்டுள்ளது. 

4. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரின் நீதிமன்றத்தால் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வெழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வின் போது, ஆய்வக உதவியாளரை நியமனம் செய்வது தொடர்பாக தேவையான ஆணையிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை வகுக்குமாறு ஆணையிட்டுள்ளது. 

5. பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஆகியோரின் பரிந்துரையுடன் பெறப்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கோரிக்கையினை பரிசீலித்த அரசு, அதனை ஏற்று, மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் ஆகியவற்றை பின்பற்றி, மத்திய பள்ளிக் கல்வி வாரியத்தால் (CBSE) மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று,

இனி வருங்காலங்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் நடைமுறையில் உள்ள மேல்நிலை /இடைநிலை / எட்டாம் வகுப்பு (தனித்தேர்வர்) ஆகிய பொதுத்தேர்வுகள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு, தொழில்நுட்ப தேர்வுகள் ஆகியவற்றை எழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு அவர்களுடைய குறைபாட்டின் தன்மைக்கேற்ப சலுகைகளை, வழங்கி பொதுத்தேர்வுகள் நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு தேர்வுத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.