“டீச்சர்ஸ் கையில் இனி மொபைல் இருக்கக் கூடாது” மீதி வினாத்தாள்களுக்கு சீல்…. ரூல்ஸ் போட்ட அரசு….!!
SeithiSolai Tamil March 06, 2026 08:48 PM

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை மிக முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வு மையங்களுக்குள் ஆசிரியர்கள் செல்போன் கொண்டு செல்லத் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும், வினாத்தாள் கசிவைத் தவிர்க்கவும் மற்றொரு முக்கியமான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள வினாத்தாள்களை உடனடியாக உறையினுள் வைத்துச் சீலிட வேண்டும். அந்தச் சீலிடப்பட்ட உறைகளைத் தவறாமல் துறை அலுவலரிடம் (Departmental Officer) ஒப்படைக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு அறையில் ஒரு நிமிடம் கூடக் கூடுதல் வினாத்தாள்கள் ஆசிரியர்களிடம் இருக்கக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.