ஐபிபிஎஸ் (IBPS CRP) தேர்வில் வெற்றி பெற்று, இந்தியன் வங்கியில் வேலை கிடைத்த செய்தியை மகள் சொல்ல, அதைக் கேட்டு அந்தத் தந்தை ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி இணையவாசிகளை நெகிழ வைத்துள்ளது. தன் மகளின் கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றியை அறிந்த அந்த நடுத்தர வர்க்கத் தந்தை, உணர்ச்சிப் பெருக்கில் குழந்தையைப் போல தேம்பித் தேம்பி அழுதது பார்ப்பவர் கண்களையும் குளமாக்கியுள்ளது.
எக்ஸ் வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, ஒரு தந்தையின் தியாகத்திற்கும் பிள்ளைகளின் வெற்றிக்கும் இடைப்பட்ட உன்னதமான பிணைப்பை பறைசாற்றுகிறது. “பிள்ளைகளின் முன்னேற்றமே பெற்றோருக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த விருது” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து, அந்த மகளுக்குப் பாராட்டுக்களையும் தந்தைக்கு வாழ்த்துகளையும் குவித்து வருகின்றனர்.