தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் இனி ஊதியத்துடன் கூடிய 6 மாதங்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதுவரை ஒப்பந்த பணியாளர்களுக்கு இத்தகைய சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்கள் இருந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
நீண்ட நாட்களாக செவிலியர்கள் முன்வைத்து வந்த இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியிருப்பது மருத்துவத்துறையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பல நூற்றுக்கணக்கான பெண் செவிலியர்கள் பயன்பெறுவார்கள்.
பெண் ஊழியர்களின் நலன் மற்றும் மகப்பேறு கால பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒப்பந்த பணியாளர்களின் உரிமைகளை நிலைநாட்டும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
Edited by Siva