“இது கழிப்பறையா இல்ல தியேட்டர் சீட்டா?” மாநகராட்சி செய்த அட்டகாசம்…. நெட்டிசன்கள் கலாய்….!!
SeithiSolai Tamil March 07, 2026 10:48 AM

”பொதுக் கழிப்பறைன்னா இவ்வளவு பொதுவா இருக்கக் கூடாதுப்பா!” எனச் சொல்லும் அளவுக்கு மகாராஷ்டிராவின் मीरा-भाईंदर மாநகராட்சி ஒரு விசித்திரமான காரியத்தைச் செய்துள்ளது. அங்குள்ள ஆர்.என்.பி பார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள ஒரு பொதுக் கழிப்பறையில், நான்கு கழிப்பறை இருக்கைகள் ஒரே வரிசையில் எவ்வித தடுப்புச் சுவரோ அல்லது திரையோ இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளன. இதைப் பார்த்த பொதுமக்கள், “என்னப்பா இது.. குரூப் டிஸ்கஷன் பண்ற இடமா?” என மாநகராட்சி நிர்வாகத்தைக் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

இந்த விசித்திரமான கழிப்பறையின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. “ரோமானியக் காலத்துக் கழிப்பறையை விட மோசமா இருக்கே” என்றும், “என்ஜினீயர் என்ன போதையில பிளான் போட்டாரு?” என்றும் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பாஜக தலைவர் ரவி வியாஸ் இது குறித்துக் கடும் கண்டனம் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரியுள்ளார். மாநகராட்சி நிர்வாகமோ, “இது பழைய கழிப்பறை, பழுதுபார்க்கச் சொன்னோம், இப்படி ஆகிடுச்சு” என மழுப்பலான பதிலைக் கூறித் தப்பிக்க முயன்று வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.