திங்கட்கிழமை பள்ளி, கல்லூரி விடுமுறை... புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உத்தரவு!
Dinamaalai March 07, 2026 12:48 PM

மார்ச் 9ம் தேதி திங்கட்கிழமை  புதுக்கோட்டை மாவட்டத்தில், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அந்த நாளில் விடுமுறை வழங்கப்படும். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாலும், உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14ம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், அரசு தேர்வுகள் வழக்கம் போல் திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயக்கம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.