தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிறார்… மனைவியை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா?…. விஜய்யை, அமீர் கடும் சாடல்…!!!
SeithiSolai Tamil March 07, 2026 02:48 PM

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கிய நாள் முதல் பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில் தற்போது அவரது குடும்ப வாழ்க்கை தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் மனைவி சங்கீதா அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரியுள்ள நிலையில் அது குறித்து விஜய் தரப்பில் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இந்தச் சூழலில் சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகை திரிஷாவுடன் விஜய் பங்கேற்றது சங்கீதாவின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய்க்கு ஆரம்பம் முதல் ஆதரவு தெரிவித்து வந்தவர்கள் கூட இந்தச் சம்பவத்தால் தற்போது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய பரபரப்பான சூழலில் மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மகளிருக்கான முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இயக்குனர் அமீர் இது குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டிருப்பதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது மனைவி மற்றும் மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு விஜய் மகளிர் தின விழா கொண்டாடுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமீரின் இந்த அதிரடி விமர்சனம் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.