பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு என்பதற்குச் சான்றாக, சீனாவில் ஒரு இளைஞர் தனது ‘பூனை பராமரிப்பு’ சேவையின் மூலம் ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது பலரும் வெளியூர் சென்றுவிடுவதால், வீட்டில் தனியாக இருக்கும் செல்லப் பூனைகளுக்கு உணவளிப்பது, நகம் வெட்டுவது, கூண்டுகளைச் சுத்தம் செய்வது போன்ற சேவைகளை ஹுவான் மற்றும் அவரது குழுவினர் வழங்கியுள்ளனர்.
வெறும் 20 நாட்களில் சுமார் 2,000 ஆர்டர்களை முடித்த இந்த டீம், இதன் மூலம் 23,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சம் ரூபாய்) வருமானம் ஈட்டியுள்ளது. இதற்காக அதிகாலை 3 மணிக்கு வேலைக்குச் செல்லும் ஹுவான், இரவு 11 மணி வரை உழைக்கிறார். ஒரு நாளைக்கு வெறும் 3 முதல் 4 மணிநேரம் மட்டுமே தூங்கி, பூனைகளுக்காகவே தன் நேரத்தை ஒதுக்கியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக விலையேற்றம் செய்யாமல் இந்தச் சேவையைச் செய்து வரும் இவருக்கு, இப்போது வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர்.