
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அத்துமீறல் புகார்கள் தொடர்பான FBI ஆவணங்களை அந்நாட்டின் நீதித்துறை வெளியிட்டது. மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் மூலம் டிரம்பிற்கு அறிமுகமான பெண் ஒருவர், தான் 13 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுமியாக இருந்தபோது டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த ஆவணங்களில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆவணங்கள் தவறுதலாக டூப்ளிகேட் என வகைப்படுத்தப்பட்டதால் பொதுமக்களின் பார்வைக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் மற்றும் டிரம்ப் ஆகிய இருவருமே தன்னை தாக்கினர் என்றும், டிரம்பின் அத்துமீறலை தடுக்க அவரை தான் கடித்ததாகவும் அந்த பெண் சாட்சியம் அளித்துள்ளார். இப்பிரச்சனை குறித்து பேசக்கூடாது என பல ஆண்டுகளாக தனக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் டிரம்ப் தரப்பு அனைத்து குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அதிபருக்கு எதிரான தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட பரப்புரை என நீதித்துறை முன்பு தெரிவித்திருந்தது.
Edited by Siva