மொத்தம் 15,472 விருப்பமனு தாக்கல்- ரூ.23 கோடி கல்லா கட்டிய திமுக?
Top Tamil News March 07, 2026 07:48 AM

திமுக சார்பில் போட்டியிட 15,372 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள்  20.02.2026 முதல் 06.03.2026 வரை வழங்கப்படும் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு பெறுவது இன்றோடு நிறைவடைந்துள்ளது. கட்சி நிர்வாகிகள் மிகுந்த எழுச்சியோடும், உற்சாகத்தோடும் வரலாறு காணாத வகையில் 15,372 விருப்ப மனுக்களை வழங்கியுள்ளனர். திமுக தலைவர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என  1,473 விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

இதேபோல் விருப்பமனு தாக்கல் மூலம், திமுக ரூ.23 கோடி நிதி திரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ.15,000 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.