நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாகவும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. 2021 முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், ஒரு நடிகையுடனான நெருக்கம் தான் இதற்கு காரணம் என்றும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த பரபரப்பான சூழலில், சமீபத்தில் சென்னையில் நடந்த திருமண வரவேற்பு ஒன்றில் நடிகை திரிஷாவுடன் விஜய் ஜோடியாக கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திரிஷா அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இது விஜய்யின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தை முன்னிட்டு, பழம்பெரும் நடிகர் ராமராஜன் தனது விவாகரத்தின் போது காட்டிய கண்ணியம் குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். நளினியை பிரிந்தபோது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “தன் மனைவியைப் பற்றி வெளியே பேசுவது நாகரிகம் இல்லை” என்று கூறி ராமராஜன் அமைதி காத்தார். விவாகரத்துக்குப் பிறகும் அவர் ஒருவரைக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் பேசிய அந்த பழைய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
எவ்வளவு பெரிய உயரத்திற்குச் சென்றாலும் குடும்பத்தை மரியாதையுடன் நடத்துவதே உண்மையான மனிதநேயம் என்று கூறி, பலரும் விஜய்யின் தற்போதைய செயல்பாடுகளுடன் ராமராஜனை ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.