LPG Cylinder Price: சர்வதேச போர் சூழல் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை தொடர்ந்து, வீட்டு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை நள்ளிரவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 60 ரூபாயும், வணிக பயனபட்டிற்கான சிலிண்டரின் விலை 114 ரூபாய் மற்றும் 50 காச்களும் அதிகரித்துள்ளது. இது குடும்பதலைவிகள், நடுத்தர மக்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பை தொடர்ந்து, சென்னையில் ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த, 19 கிலோ எடையிலான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 2 ஆயிரத்து 43 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக பயன்பாட்டிற்கான 14.2 கிலோ எடையிலான சிலிண்டர் விலை 928 ரூபாய் 50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.