தமிழக பட்ஜெட்டில் 30% கொள்ளையடிக்கும் ஸ்டாலின் சார்… விஜய் கடுமையாக சாடல்!
TV9 Tamil News March 07, 2026 10:48 PM

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை (மார்ச் 7) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று வழக்கம் போல தனது பாணியில் ஒரு குட்டி கதையை தொடங்கி தனது உரையை ஆரம்பித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து, அவரது உரையின் இறுதியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்து பேசி இருந்தார். இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் பேசியதாவது: தமிழகத்தில் ரூ.4.39 லட்சம் கோடிக்கு பட்ஜெய் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், 30 சதவீதம் ஸ்டாலின் சார் டேக்ஸ்-க்கு செல்கிறது. இது என்ன டேக்ஸ் என்னவென்றால்.

ஸ்டாலின் சார் டேக்ஸ் என்றால் என்ன

தமிழக பட்ஜெட்டில் ஒதுக்கக் கூடிய நிதியில் 20 சதவீதம் ஸ்டாலின் சாருக்கும், 10 சதவீதம் அவருடைய அமைச்சர்களுக்கும் செல்கிறது. பொதுவாக அரசுக்கு தான் மக்கள் வரி அளிப்பார்கள். ஆனால், அரசே ஒருவருக்கு வரி அளிக்கிறது என்றால், அதற்கு பெயர் தான் ஸ்டாலின் சார் டேக்ஸ் ஆகும். இதை விட நாகரிகமாக நீங்கள் அடிக்கிற கொள்ளையும், ஊழலையும் சொல்ல முடியாது. மக்களுக்காக ஒதுக்கக்கூடிய பணத்தை நீங்கள் சைடாக ஒதுக்காமல், மொத்த பணத்தையும் மக்களுக்காக செலவு செய்தால் அருமையான அரசாங்கத்தை வழங்கியிருக்க முடியும்.

மேலும் படிக்க: தாலிக்கு ஒரு பவுன் தங்கம் முதல் மோதிரம் வரை… தவெகவின் மாஸ் வாக்குறுதி!

தமிழக அரசின் நிதி பற்றாக்குறைக்கு காரணம்

அரசிடம் பணம் இல்லை… பணம் இல்லை என்று கூறிவிட்டு அதிகாலையில் ஒவ்வொருவரின் வங்கி கணக்குக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பணத்தை செலுத்துகின்றனர். இது எப்படி வழங்க முடிகிறது. அப்படி என்றால் அரசிடம் நிதி உள்ளது. அரசிடம் பற்றாக்குறை இருப்பதே காரணம். அந்த பற்றாக்குறைக்கான காரணம் இது போன்ற ஸ்டாலின் சார் டேக்ஸ் எடுத்துக் கொள்வதே ஆகும். இந்த முறைகளை ஒழித்தாலே அனைத்தும் சரியாகும். எல்லாம் தானாகவே நன்றாக நடக்கும் என்று தெரிவித்தார். இறுதியாக நல்லதே நடக்கும். நம்பிக்கையாக இருங்கள் என்று கூறி விஜய் தனது உரையை முடித்தார்.

திமுக அரசு மீது தொடர் விமர்சனம்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது முதல் மாநில மாநாடு முதல் அனைத்து கட்சி சார்ந்த நிகழ்வுகளிலும் ஆளும் திமுக அரசையும், முதல்வர் மு. க. ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதே போல, தற்போதும் திமுக அரசு மீதான விமர்சனத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முன் வைத்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க: ரீசன்டா சில பிரச்னைகள் ஓடிட்டு இருக்கு…. விவாகரத்து விவகாரம் குறித்து பேசிய விஜய்?

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.