திருமணமான 24 மணி நேரத்தில் அர்ஜுன் டெண்டுல்கரின் அதிரடி முடிவு; கிடைத்த அதிர்ச்சி..!
Seithipunal Tamil March 08, 2026 07:48 AM

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் ரவி காயின் பேத்தி சானியா சந்தோக் ஆகியோர் திருமணம் கடந்த 05 ஆம் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த பிரம்மாண்ட திருமணத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள், அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட உள்ளிட்ட  திரை பிரபலங்கள், தொழிலதிபர் அம்பானி குடும்பத்தினர் என் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அதேநேரம் மும்பை வான்கடே மைதானத்தில் அரையிறுதி ஆட்டம் இந்தியா - இங்கிலாந்துக்கு இடையில் நடைபெற்றது. இந்த போட்டியிலும் கிரிக்கெட் வீரர்கள் குடும்பங்களுடனும், திரைபிரபலன்கள் பலரும் பார்வையிட வந்திருந்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த கையுடன் மணமகன் அர்ஜுன் டெண்டுல்கர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் திரட்டி முடிவை எடுத்துள்ளார்.

அதாவது, அவரின் திருமணம் முடிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளேயே, நேற்றையதினம் அர்ஜுன் தனது கிரிக்கெட் யூனிஃபார்முடன் மைதானத்திற்குத் திரும்பியுள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் 'டி.ஒய். பாட்டீல் டி20'  தொடரின் அரையிறுதிப் போட்டியில் தனது டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணிக்காக விளையாட அவர் களமிறங்கினார்.

திருமணம் முடிந்த கையுடன், அர்ஜுன் டெண்டுல்கர் தனது தொழில்முறை ஆட்டத்திற்கு  முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக விளையாட வந்தது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. 

ஆனாலும்,  இந்தப் போட்டியில் அவருடைய பந்துவீச்சில், அதாவது, ஒரு ஓவர் வீசி 20 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், பேட்டிங்கில் 14 பந்துகளில் 09 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் அவரது அணி 05 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

வரும் ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாட  அர்ஜுன் ஒப்பந்தமாகியுள்ளார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.