தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News March 08, 2026 08:48 AM

பொதுவாக நிலக்கடலையில் நம் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது .எனவே இந்த பதிவில் நிலக்கடலை மூலம் கிடைக்கும் எண்ணெய் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி நாம் காணலாம் 

1.சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலைஎண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.

2.நிலக்கடலையில் மாங்கனீசு கால்சியம், ஆண்டி ஆக்சிடண்ட், வைட்டமின் இ, கார்போஹைட்ரேட், உள்ளது 3.நிலக்கடலையில் நார்ச்சத்து, கரையும் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம்,உள்ளது 
 4.நிலக்கடலையில் மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன.

5.கடலை எண்ணையில் போலிக் அமிலம் நிறைந்துள்ளது  
6.தினமும் தவறாது கடலை எண்ணெய் பயன்படுத்தி வந்தால், மகப்பேறு எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
7.கடலை எண்ணெய்யில் உள்ள நியாசின் சத்து மூளை வளர்ச்சி, ஞாபகச் சக்தி அதிகரிக்க உதவுகிறது. 8.கடலை எண்ணெய்யில் அடங்கியுள்ள ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
9.நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கக்கூடியது. 10.நிலக்கடலை தசைகளின் வலிமைக்கு தேவையான ஒன்று. நிலக்கடலை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.