மூன்று சிறுமிகள் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்பு - தந்தையே கொலையாளியா?
Webdunia Tamil March 08, 2026 04:48 PM

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், மூன்று சிறுமிகள் தண்ணீர் தொட்டி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8, 7 மற்றும் 5 வயதுடைய இந்த சிறுமிகளை அவர்களது தந்தையே தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சனிக்கிழமையன்று தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி தனது மூன்று மகள்களையும் தந்தை வெளியே அழைத்து சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். தனிப்படை அமைத்து தேடியபோது, அந்த சிறுமிகளின் உடல்கள் ஒவ்வொன்றாக நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து காமரெட்டி துணை சூப்பிரண்டு சைதன்ய ரெட்டி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த சிறுமிகளின் தாயார் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்தது. தந்தையின் மீது சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவர் எதற்காக இந்த செயலை செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.