விஜய் – திரிஷா விவகாரம்!.. அந்த காரை இப்ப யாரு ஓட்டுறாங்கன்னு தெரியாது?!… விமல் நக்கல்…
CineReporters Tamil March 08, 2026 05:48 PM

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் தங்களை கவனிக்கவில்லை எனவும், வீட்டிலேயே அந்த நடிகையுடன் குடும்பம் நடத்தியதாகவும் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்..

மேலும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், பொருளாதாரரீதியாக முடக்க பார்த்ததாகவும், அந்த நடிகை என் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருவது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது’ எனவும் குறிப்பிட்டிருந்தார்..

அதுநடந்து சில நாட்களிலேயே நடிகர் விஜய் திரிஷாவை அழைத்துக் கொண்டு ஒரு திருமண விழாவிற்கு போனார்.. எனவே சங்கீதா சொன்னது திரிஷாவைத்தான் என பலரும் கூறி வருகிறார்கள்.. நீ என்ன சொல்வது.. நானே ஊருக்கு செல்கிறேன் என்பது போல விஜய் நடந்து கொண்டார்.

இந்நிலையில், நடிகர் விமலிடம் விஜய் திரிஷா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ‘அந்த காரை இப்ப யார் ஓட்டுகிறார்கள் என்று எனக்கு தெரியாது’ என்று பதில் கூறினார். கரகாட்டக்காரன் படத்தில் ‘இந்த கார சொப்பன சுந்தரி வச்சிருந்தா.. அந்த சொப்பன சுந்தரி இப்ப யாரு வச்சிருக்காருன்னு தெரியல; என்று கவுண்டமணி பேசுவார்.. அதுபோல இருந்தது விமலின் பதில்.

மேலும் ஒரு நடிகரை பிடித்தால் மனசுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.. நடிகரின் வண்டி போகும் போது விரட்டிக்கொண்டு பின்னாலேயே போய், விபத்தில் சிக்கி, அடிபட்டு.. இப்படியெல்லாம் அன்பை காட்ட வேண்டிய அவசியம் இல்லை.. பாதுகாப்பாக இருக்க வேண்டும்’ எனவும் அவர் கூறியிருக்கிறார்.

சிவா

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.