மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய நிதியுதவி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 21 முதல் 40 வயதுடைய இளைஞர்கள் இதற்கு தகுதியானவர்கள். இதன் மூலம் சுமார் 1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கவும், இளைஞர்களின் பொருளாதார தேவைகளைச் ஓரளவிற்கு பூர்த்தி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மேற்கு வங்க இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி திட்டம் அரசியல் வட்டாரங்களிலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. ஆனால் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதிமொழி வழங்காமல் ரூ.1500 வழங்குவதா என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
Edited by Siva