லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு?.. கண்டுபிடித்து சரி செய்வது எப்படி?
TV9 Tamil News March 10, 2026 01:48 AM

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் தங்களது வேலை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக லேப்டாப் (Laptop) மற்றும் கம்ப்யூட்டரை (Computer) பயன்படுத்துகின்றனர். அவை வேலைகளை மிகவும் எளிதானதாக மாற்றினாலும் அவற்றின் மூலம் சில சிக்கல்களும் வரும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு (Virus Attack) ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அதனை எப்படி சரிசெய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லேப்டாப், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு? – சரிசெய்வது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஏதேனும் ஒரு புதிய கணக்கு தானாக சைன் இன் ஆகி, பிறகு சைன் அவுட் ஆகியுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள். அல்லது உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் பயன்படுத்திக்கொண்டு இருக்கும்போதே கிராஷ் ஆகிறது என்றாலும் இதே சிக்கல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக ஏதேனும் ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை (Antivirus Software) பதிவிறக்கம் செய்து வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள்.

இதையும் படிங்க : 70 கி.மீ மைலேஜ்… ரூ.70,000க்கும் குறைவான விலையில் 4 சூப்பர் பைக்குகள் இதோ

தேவை இல்லாத ஃபோல்டர்கள்

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் தானாக ஏதேனும் பாப் மெசேஜ் வர தொடங்கினால் வைரஸ் தாக்குதளுக்கு உள்ளாகியுள்ளது உறுதி. நீங்கள் கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் ஃபோல்டரில் ஏதேனும் தேவையில்லா புதிய ஃபோல்டர் உருவாகியுள்ளது என்றால் உங்கள் செயலி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி யாரோ உங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர் என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க : டிவி ரிமோட்டில் உள்ள மஞ்சள், பச்சை, நீலம் பட்டன்கள் எதற்காக தெரியுமா? ஆச்சரிய தகவல்

புதிய ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் பதிவிறக்கம் செய்யுங்கள்

உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் ஏற்கனவே  ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் இருந்து அதில் இருந்து எந்த வித தகவலும் வரவில்லை என்றால் அந்த சாஃப்ட்வேரை உங்கள் செயலியில் இருந்து நீக்கம் செய்யுங்கள். பிறகு வேறு ஒரு பாதுகாப்பான ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்யுங்கள். ஒருவேளை உங்களால் அந்த ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்றால் உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேற்குறிப்பிட்ட இந்த முறைகளை பின்பற்றி உங்களது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதா என்பதை உங்களால் சுலபமாக தெரிந்துக்கொள்ள முடியும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.