விஜய் துவங்கிய தமிழக வெற்றி கழகம் அரசியல் கட்சி தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் நம்புகிறார்கள். விஜயும் பேசும் எல்லா மேடைகளிலும் ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஆனால், கருர் சம்பவத்தை மட்டுமே வைத்து விஜயை திமுக விமர்சனம் செய்து வருகிறது..
விஜய் கேட்கும் பல கேள்விகளுக்கு திமுக தரப்பு பதில் சொல்வதில்லை. மேலும் காங்கிரஸை எப்படியாவது தங்கள் கூட்டணியில் கொண்டுவர வேண்டும் என விஜய் முயற்சிகள் செய்தார்.. 74 தொகுதிகளை ஏற்றுக்கொண்டு தவெகவுடன் கூட்டணி அமைக்க ராகுல் காந்தியும் முடிவு செய்ததாக சொல்லப்பட்டது.. ஆனால் சோனியா காந்தியிடம் பேசி வெறும் 28 தொகுதிகளை மட்டுமே கொடுத்து காங்கிரசை திமுக கூட்டணியில் இணைத்து விட்டார் முக ஸ்டாலின்..
எனவே 2020 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தனித்துவிடப்பட்டிருக்கிறார். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் வேட்பாளர் நேர்காணலை துவங்கி மார்ச் மூன்றாவது வாரத்திற்குள் வேட்பாளர் பட்டியலை வெளியிட தவெக முடிவெடுத்திருக்கிறதாம்.. அதோடு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் விஜய் பிரச்சாரம் செய்யும் திட்டங்கள் தயாராக வருவதாக சொல்லப்படுகிறது..
பிரச்சாரம் தொடராக தொடர்பாக தமிழக அரசு உருவாக்கியிருக்கும் sop-ஐ காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்தால் எல்லா ஊர்களிலும் மாநாடுகளை நடத்தவும் தவெக திட்டமிட்டிருக்கிறது. திமுகவா?.. தவெகவா? மோதி பார்த்து விடுவோம் என விஜய் கூறியிருப்பதால் தவெகவின் தேர்தல் பணிகள் வேகமெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது..