இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான சங்கீதா நடிகர் விஜயை திருமணம் செய்து கொண்டார்.. திருமணமாகி 27 வருடங்கள் ஆனா நிலையில் சில நாட்களுக்கு முன்பு விஜயிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகினார். அந்த மனுவை அவர் சில மாதங்களுக்கு முன்பு அளித்துவிட்ட நிலையில் அதை யாரோ கைப்படம் எடுத்து வெளியே கசிய விட்டார்கள்.. விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தங்கள் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும் சங்கீதா அதில் குறிப்பிட்டிருந்தார்..
மேலும் ‘கடந்த ஐந்து வருடங்களாகவே விஜய் அந்த நடிகையுடன் உறவில் இருக்கிறார்.. நான் இது பற்றி கேட்டபோது என்னை கொடுமைப்படுத்தினார்.. பொருளாதார ரீதியாக என்னை முடக்க பார்த்தார்’ என்று சங்கீதா பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். மேலும் எனக்கு சென்னையில் வசிக்க வீடு இல்லாத காரணத்தால் விவாகரத்து வரும் வரை நீலங்கரையில் விஜயின் வீட்டில் வசிக்க என்னை அனுமதிக்க வேண்டும்’ எனவும் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்..
ஒருபக்கம் நடிகை திரிஷாவை அழைத்துக் கொண்டு விஜய் சமீபத்தில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார்.. அதாவது அவரைப் பற்றிய வதந்திக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.. ஆனால், இது அவருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், ஒரு விழாவில் பார்த்திபனிடம் திரிஷா புகைப்படத்தை காட்டி ‘உங்கள் குந்தவை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என கருத்து கேட்டபோது ‘இந்த குந்தவையை வீட்டுக்குள் குந்த வைப்பது நல்லது.. குந்தவை வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பது நல்லது.. பல பிரச்சனைகள் வருகிறது’ என அவரின் பாணியில் நக்கலடித்திருக்கிறார்.
முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com