சிபிஐ விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க!.. இயக்குனர் அமீர் நக்கல்..
WEBDUNIA TAMIL March 10, 2026 12:48 AM


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.. துவக்கத்தில் சற்று தயக்கம் காட்டிய விஜய் ஒரு கட்டத்தில் இறங்கி அடிக்க ஆரம்பித்தார்.. தவெக பொதுக்கூட்டங்களில் திமுக கடுமையாக விமர்சித்து பேச துவங்கினார்..
விஜய் இப்படி எல்லாம் பேசுவாரா என்ன பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.. அதே நேரம் 2025 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தவெகவுடன் எந்த அரசியல் கட்சியும் இதுவரை கூட்டணி அமைக்கவில்லை..

இத்தனைக்கும் ஆட்சி மற்றும் பாதுகாப்பில் பங்கு கொடுப்போம் எனவும் விஜய் கூறியிருந்தார்.. காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடந்து அந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவில் தவெக இருந்தது.. ஆனால் திமுக அதை உடைத்து விட்டது.. 28 தொகுதிகள் கொடுத்து தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸை இழுத்துவிட்டது. ஒருபக்கம் அதிமுக - பாஜக உள்ள என்.டி..ஏ கூட்டணியில் விஜயை இணைக்கும் முயற்சிகள் நடப்பதாக கடந்த சில தினங்களாகவே செய்திகள் கசிந்து வருகிறது..

ஒருபக்கம், கரூர் சம்பவம் தொடர்பாக மீண்டும் சிபிஐ விசாரணைக்கு விஜய் நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.. இந்நிலையில் இயக்குனரும் திமுக ஆதரவாளருமான அமீர் சிபிஐ விசாரணைக்கு பயந்து என்.டி.ஏ கூட்டணிக்கு போகாதீங்க.. அதோட உங்க அரசியல் முடிஞ்சிடும்’ என வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்’ வைத்திருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.