தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தேதி இன்னும் சில தினங்களில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. இந்த சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்கள், வாக்குறுதிகள், கூட்டணி, தொகுதி பங்கீடு என தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.
அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிமுகவில் இன்னும் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையை வெளிப்படையாக தொடங்கவில்லை. இதற்கிடையில், பெரும்பான்மையான கட்சிகள் தங்கள் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பெற்றுள்ளன.

ஒவ்வொரு கட்சிகளும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு பெற்றிட வேண்டும் என, தங்கள் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, எந்தத் தொகுதியில், எந்தக் கட்சிக்கு, யாரை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருக்கிறது எனும் உத்தேச பெயர் பட்டியலும் வெளியாகியுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு அரசியல் களத்திற்குள் வந்துள்ள தவெகவில் சுமார் 20க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களைக் கொண்ட உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

தி.நகர் - என்.ஆனந்த், கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன், உசிலம்பட்டி (அ) திருப்பரங்குன்றம் - சி.டி.ஆர்.நிர்மல்குமார், வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா, மயிலாப்பூர் – வெங்கட்ரமனன், எழும்பூர் – ராஜ்மோகன், அம்பத்தூர் - JCD பிரபாகர், ராயபுரம் (அ) மதுரவாயல் – ரேவந்த், ஆர்.கே. நகர் - வி.எஸ்.பாபு, துறைமுகம் - சினோரா அசோக், சேலம் தெற்கு – பார்த்திபன்,
திருக்கோவிலூர் – பரணிபாலாஜி, ஸ்ரீரங்கம் - கு.ப. கிருஷ்ணன், கோவை வடக்கு - சம்பத் குமார், கரூர் – மதியழகன், சோழிங்கநல்லூர் - ஈ.சி.ஆர் சரவணன் (இந்த தொகுதி அருள் பிரகாசம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டால் ஆதம்பாகத்தில் போட்டியிடுவார்),
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - மோகன கிருஷ்ணன், புதுக்கோட்டை - முகமது பர்வேஸ், காரைக்குடி – பிரபு, தஞ்சாவூர் – சரவணன், திருமங்கலம் - ராஜ்மோகன் வேலா ராமமூர்த்தி (இவர் திருப்பரங்குன்றம் தொகுதியை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது), தூத்துக்குடி – சாமுவேல், மாதாவரம் - ML பிரபு, திருவொற்றியூர் - மரிய வில்சன், அந்தியூர் – வெங்கடேஷ், அரியலூர் – சிவா என உத்தேச பட்டியலில் சொல்லப்படுகிறது.