வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாக கொண்டு தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரங்கள், நிர்வாகிகள் சந்திப்பு, பொது கூட்டம் என மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
கடந்த 2025 -ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமை கரூரில் மக்கள் சந்திப்பின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், கைக்குழந்தை என மொத்தம் 41 பேர் பலியாகியுள்ளனர். தற்போது இது தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணையில் இருந்து வருகிறது. நாளை இது குறித்த விசாரணையும் நடக்கவுள்ளது.

கரூர் சம்பவத்தை அடுத்து, மக்கள் சந்திப்பை நிறுத்திய விஜய், நிர்வாகிகள் சந்திப்பு என மாற்றி சுமார் 5,000 பேர் வரை சந்தித்து வருகிறார். இந்த சூழலில் 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் விவகாரம், புலி படத்தில் வரி ஏய்ப்பு எனும் நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமீபத்தில் அவரது மனைவி விஜய்க்கு நடிகை ஒருவருடன் தகாத உறவு உளது என கூறி, விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளமை, கரூர் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ விசாரணைக்கு அழைப்பு என அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்.
இருப்பினும் எதற்கும் அசராமல் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மறுப்பக்கம் யார் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என்பது குறித்தான தகவல்களும் வெளியாகி வருகிறது.

அதன்படி, தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் களம் இறங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, திமுக கைவசம் இருக்கும் இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட இருப்பதாக தங்கள் வெளியாகியுள்ளமை பெரும் கவனம் பெற்றுள்ளது.
விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுகவின் இனிகோ இருதயராஜும், பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி. சேகரும் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.