ரஜினி சினிமாவில் வளர துவங்கியபோது கமலுடன் இணைந்தே படங்களில் நடித்தார். ரஜினிக்கு நண்பராக அல்லது வில்லனாக நடித்து வந்தார் ரஜினி. ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து தனித்தனியாக நடிக்க துவங்கினர். கமல் சிறந்த நடிகர் என்கிற பெயரை பெற்றாலும் வியாபாரத்திலும், அதிக ரசிகர்களை உருவாக்கியதிலும் கமலை ஓவர் டேக் செய்தார் ரஜினி.
எனவே, ரஜினியும் கமலும் 40 வருடங்களாக இணைந்து நடிக்கவில்லை. ஆனால், தற்போது அது கூடிவந்திருக்கிறது. ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ரஜினியும், கமலும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை டாக்டர், ஜெயிலர், ஜெயிலர் 2 ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அந்த கிளிம்ப்ஸ் வீடியோவிலும், அது தொடர்பான போஸ்டரிலும் KH x RK என எழுதப்பட்டிருந்தது. அதாவது, கமலும், ரஜினியும் இணைந்து நடிப்பதன் சுருக்கம் அது. முதலில் அதை RK x KH என்றுதான் உருவாக்கியிருந்தனர். ஆனால், அதைப்பார்த்த ரஜினி கமல் என்னுடைய சீனியர்.. அவரின் பெயரை முன்னால் போடுங்கள் என சொல்லவே KH x RK என மாற்றினார்களாம்.
ரஜினியின் இந்த பண்பை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஏனெனில், திரையுலகில் இப்படி யோசிப்பவர்கள் மிகவும் குறைவு. எந்த இடமாக இருந்தாலும் கமலுக்கான மரியாதை ரஜினி கொடுக்க தவறியதில்லை என்பதற்கு இதுவே உதாரணம். இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது. 2027 ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.
முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com