LPG Gas Bengaluru: கேஸ் தட்டுப்பாடு: முடங்கும் உணவகங்கள்! கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகத்திற்கும் ஆபத்தா?
ஜேம்ஸ் March 10, 2026 01:14 AM

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால் ஏற்பட்ட விநியோகத் தடையால், இந்தியாவில் வணிக ரீதியான சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பெங்களூருவில் நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடப்படும்

பெங்களூரு ஹோட்டல் சங்கம்செவ்வாய்க்கிழமை முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று அறிவித்தது."எண்ணெய் நிறுவனங்கள் 70 நாட்கள் வரை எரிவாயு விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று முன்பே தெரிவித்திருந்தன. இந்த உத்தரவாதம் இருந்தபோதிலும், திடீரென விநியோகம் நிறுத்தப்பட்டது ஹோட்டல் துறைக்கு பெரும் அடியாக வந்துள்ளது" என்று சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது .

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: "எனவே, சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர்கள் இந்த விஷயத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வணிக எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்கி ஹோட்டல் துறைக்கு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்."

இந்த தட்டுப்பாடு ,  தினசரி சமையல் நடவடிக்கைகளை நம்பியுள்ள ஹோட்டல் வணிகங்களையும் பாதிக்கும் என்றும்  "கூடுதலாக, எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை எங்கள் ஹோட்டல் துறையும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல் காரணமாக உலக எரிசக்தி சந்தைகள் ஏற்ற இறக்கத்தை எதிர்கொள்வதால் இந்த சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக பாதைகளை சீர்குலைத்து, உலகளாவிய எரிசக்தி விலைகள் பீப்பாய்க்கு $100 ஐ தாண்டியுள்ளது, இது இந்தியா உட்பட பல நாடுகளில் LPG மற்றும் பிற எரிபொருள்கள் கிடைப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தட்டுப்பாடு வருமா?

தற்போது நிலவி வரும் இந்த சூழலை கருத்தில் கொண்டு சென்னை ஹோட்டல்கள் சங்கம் வணிக ரீதியான எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், உணவுத் தொழில் பாதிக்கப்படும் எனக் கூறி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளது. மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், எரிவாயுவை 'அத்தியாவசியப் பண்டமாக' கருதி தடையின்றி விநியோகிக்க வேண்டும் எனச் சங்கம் கோரியுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.