“எப்படி இறக்கலாம்?” சாட் ஜிபிடி-யிடம் கேட்ட அந்த ஒரு கேள்வி.. உயிரைப் பறிகொடுத்த மாணவிகள்.. சிக்கிய பகீர் ஆதாரங்கள்..!!
SeithiSolai Tamil March 10, 2026 12:48 PM

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இருவர், ‘சாட் ஜிபிடி’ உதவியுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மற்றும் 20 வயதுடைய இந்தத் தோழிகள் இருவரும் கடந்த மார்ச் 6ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, திண்டோலி பகுதியில் உள்ள ஒரு கோயில் கழிப்பறைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் இருவரும் உயிரிழப்பதற்கு முன்பு சாட் ஜிபிடியில் “எப்படி இறப்பது?”, “தற்கொலைக்கு எந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம்?” எனத் தேடியது அவர்களின் செல்போன் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட பதிவிற்கு, டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் “Yikes” எனப் பதிவிட்டுத் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ஏஐ (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு இது ஒரு கசப்பான உதாரணம் எனப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

“>

 

உயிரிழந்த மாணவிகளின் உடலுக்கு அருகில் ஊசிகள் மற்றும் மயக்க மருந்து பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் திண்டோலி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதளங்களில் இதுபோன்ற ஆபத்தான தகவல்கள் எளிதாகக் கிடைப்பது குறித்து சமூக ஆர்வலர்கள் தற்போது பெரும் கவலை எழுப்பியுள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.