கேப்டனின் கனவை நனவாக்கிய எல்.கே. சுதிஷ்: தேமுதிக தொண்டர்கள் உற்சாகம்!
Top Tamil News March 10, 2026 01:48 PM

அதன்படி, திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் கட்சியின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, அன்புமணி ஆகிய 6 பேரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தம்பிதுரை, அன்புமணி, எல்.கே. சுதிஷ், கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் தாங்கள் வெற்றி பெற்ற சான்றிதழை, தேர்தல் அதிகாரி சாந்தியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, தேமுதிகவின் எல்.கே. சுதிஷ் நிருபர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "மாநிலங்களவை உறுப்பினராக இன்று வெற்றி பெற்றுள்ளேன். இந்த வெற்றியை கொடுத்த பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எம்.பி.யாக நாடாளுமன்றம் சென்று, தமிழக மக்களுக்கு என்னால் என்னென்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்வேன். கேப்டன் விஜயகாந்தின் 20 வருட கனவு இது. அது இன்று நிறைவேறியுள்ளது.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்கு எத்தனை இடம், எந்தெந்த தொகுதி என்பது குறித்து தீவிரமாக பேசி வருகிறோம். இன்னும் 2, 3 தினங்களில் இதுபற்றி முடிவு செய்யப்படும்" என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.