இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வசிப்பவர்கள் பலரும் ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்தி வருகிறார்கள். வாட்ஸ் அப் இன்றி அமையாது உலகு என்கிற நிலைதான் இப்போது உருவாகியிருக்கிறது.. ஏனெனில் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அலுவல அலுவல்ரீதியாக Chat செய்வது, வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை அனுப்புவது, வீடியோ காலில் பேசுவது போன்ற பல காரணங்களுக்காகவும் பலரும் வாட்ஸ் அப் ஆப்பை பயன்படுத்துகிறார்கள்..
ஒருபக்கம்ம் ந்தை போட்டியை சமாளிப்பதற்காக வாட்ஸ்-அப்பில் புதுப்புது வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.. ஏற்கனவே GPay, Phopne Pe போல வாட்ஸ்-அப் மூலமாகவே பணத்தை அனுப்பும் வசதி கொண்டுவரப்பட்டது. இது பயணர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்தான், வாட்ஸ்-அப் பிளஸ் என்ற ப்ரீமியம் கட்டண சேவையை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. அதில் வழக்கமான whatsappபை விட கூடுதல் வசதிகள் இடம் பெற்றிருக்கிறது. குறிப்பாக பயனர்கள் தங்கள் ப்ரொபைலை தாங்களாகவே Customize செய்து கொள்ளலாம்.. மேலும் App-ன் தோற்றம், கலர் மற்றும் App Icon- ஐ நமக்கு பிடித்தது போல மாற்றிக்கொள்ளும் வசதிகளும் இடம்பெறும் என மெட்டா தெரிவித்திருக்கிறது..
மேலும் ப்ரீமியம் சந்தாதாரர்களுக்கு PIN செய்யப்பட்ட பார்வைகளின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 20ஆக உயர்த்தவும், மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் செல்போன்களை அடையாளம் கண்டு கொள்ள தனித்தனி ரிங்டோன்களை அமைக்கும் வசதியும் வழங்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.. தற்போது இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும்,இன்னும் சில மாதங்களில் இந்த ப்ரிமியம் கட்டண சேவை அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.