தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவின் மாநில நிர்வாகி கோட்டையடி ராமச்சந்திரன், தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மதிமுகவின் வலுவான முகமாக அறியப்படுபவர் மாநில நிர்வாகி கோட்டையடி ராமச்சந்திரன். இவர் இன்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இவருடன் மதிமுகவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகினர். அவர்களுக்குக் கடம்பூர் ராஜூ சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
மதிமுகவுக்குப் போதிய வாக்கு வங்கி உள்ள மாவட்டங்களில் விருதுநகர் மிக முக்கியமானது. அத்தகைய கோட்டையிலேயே கட்சியின் மாநில நிர்வாகி விலகியது, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “மதிமுக தலைமை மீது இருந்த அதிருப்தி காரணமாகவே இந்த முடிவு” என ராமச்சந்திரனின் ஆதரவாளர்கள்
இந்தச் சேர்க்கை ஒருபுறம் இருக்க, அடுத்த ‘ட்விஸ்ட்’டாக தேமுதிகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் அதிமுகவுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் விருதுநகர் மட்டுமின்றி மாநில அளவில் மேலும் பல ‘விக்கெட்டுகள்’ அதிமுக பக்கம் வீழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைவு குறித்து அதிமுகவினர் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் பலவீனம் எங்கள் பலமாக மாறுகிறது. மக்கள் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் எங்களை நோக்கி வருவது, வரவிருக்கும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தரும்” என உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர். மேலும்
விருதுநகர் மாவட்ட அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம், திமுக மற்றும் மதிமுக கூடாரத்தைத் திகைக்க வைத்துள்ளது.