கேஸ் தட்டுப்பாடா? சிலிண்டர் விலை ஏறுதா? கவலையே இல்லை.. Induction Stove இருக்கவே இருக்குது.. பொதுமக்கள் கூல்..!
WEBDUNIA TAMIL March 10, 2026 03:49 PM

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அண்மையில் உயர்ந்ததை தொடர்ந்து, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சார சமையல் கருவிகளின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, இண்டக்ஷன் அடுப்புகளின் விற்பனை அதிரடியாக உயர்ந்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் மக்கள் மின்னணு சாதன கடைகளில் குவிகின்றனர். வழக்கமாக ஒரு நாளைக்கு 40 அடுப்புகள் விற்கப்படும் கடைகளில், தற்போது 130-க்கும் மேற்பட்ட அடுப்புகள் விற்பனையாகின்றன.

இண்டக்ஷன் அடுப்புகள் மட்டுமின்றி, மின்சார கெட்டில், ரைஸ் குக்கர் மற்றும் மைக்ரோவேவ் ஓவன் போன்ற சாதனங்களுக்கும் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. எரிவாயு விலையேற்றம் சாமானிய மக்களின் பட்ஜெட்டை பாதித்துள்ளதால், சிலிண்டர் பயன்பாட்டை குறைத்து மின்சார சமையல் முறைக்கு மக்கள் வேகமாக மாறி வருகின்றனர்.

இந்தத் திடீர் தேவையால் சந்தையில் மின்சார அடுப்புகளுக்கான இருப்பு வேகமாக தீர்ந்து வருவதாகவும் அதிக ஸ்டாக் வைக்க முடிவு செய்திருப்பதாகவும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.