ஈரான் மீதான தாக்குதலை கொண்டாடினால் சொத்துக்கள் பறிமுதல்: அரசு வழக்கறிஞர் எச்சரிக்கை..!
WEBDUNIA TAMIL March 10, 2026 02:48 PM

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வெளிநாடு வாழ் ஈரானியர்களுக்கு, அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரானின் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நகரங்களில் ஈரானியர்கள் பேரணிகளை நடத்தினர்.

இதனை தொடர்ந்து, புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ள மொஜ்தாபா காமேனி தலைமையிலான அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி வரையிலான ஈரானியர்களில், குறிப்பாக லண்டன் போன்ற நகரங்களில் வசிப்பவர்கள், இந்த மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், தங்களின் போராட்டம் தொடரும் என்றும் துணிச்சலுடன் தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டுகால மதகுருமார்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.