தமிழகத்தில் தொழில் செய்யும் பெண்களுக்கு, குறிப்பாக எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள உணவகம் மற்றும் தேநீர் விடுதி நடத்தும் பெண்களுக்கு, ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த முழுமையான விபரங்களைத் தெரிஞ்சுக்கோங்க. இந்த திட்டத்தில் கடன் பெற யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்னன ஆவணங்கள் தேவை என்று பார்க்கலாம்.
சமீபத்திய எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறுதொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக ஹோட்டல் மற்றும் டீக்கடை வைத்திருப்பவர்கள் முன்னுரிமை பெறுகின்றனர்.

அரசு வழங்கும் ரூ.10 லட்சம் கடனில், திட்டத்தைப் பொறுத்து ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3.5 லட்சம் வரை திரும்பச் செலுத்தத் தேவையில்லை (மானியம்). மீதமுள்ள தொகையை மட்டும் குறைந்த வட்டியில் தவணை முறையில் செலுத்தினால் போதும். டீக்கடை வைத்திருப்பவர்கள் முன்னுரிமை பெறுகின்றனர்.
1. முக்கியக் கடன் திட்டங்கள்:| திட்டத்தின் பெயர் | கடனுதவி விபரம் | முக்கிய அம்சம் |
| UYEGP திட்டம் (Unemployed Youth Employment Generation Programme) | ரூ.15 லட்சம் வரை (வியாபாரத்திற்கு ரூ.5 லட்சம் வரை) | 25% அரசு மானியம் (Subsidy) உண்டு. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. |
| மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் | ரூ.10 லட்சம் வரை | பெண்களுக்கு முன்னுரிமை மற்றும் வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது. |
| அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் | திட்ட மதிப்பில் 35% மானியம் | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோருக்கான சிறப்புத் திட்டம். |
| PMEGP திட்டம் (மத்திய - மாநில கூட்டுத் திட்டம்) | ரூ.50 லட்சம் வரை (உற்பத்தி) | கிராமப்புறப் பெண்களுக்கு 35% வரை மானியம் கிடைக்கும். |