இதற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடக்கும் நிலையில், ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. இதற்கு முழுமையான தகுதி விவரங்கள் குறித்துக் காணலாம்.
2026- 27ஆம் கல்வியாண்டிற்கான கேந்திரிய வித்யாலயா பால்வாடி மற்றும் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பை கேந்திரிய வித்யாலயா அமைப்பு (KVS) வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு இன்று (மார்ச் 20ஆம் தேதி) தொடங்கி உள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவுத் தேர்வோ, எழுத்துத் தேர்வோ, நேர்காணலோ கிடையாது. முற்றிலும் குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கேந்திரிய வித்யாலயா சங்கதன் தெரிவித்துள்ளது.
ஆர்வமுள்ள பெற்றோர்கள் kvsonlineadmission.kvs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பால்வாடி மற்றும் 1-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்குக் குழந்தைகளுக்கு எவ்விதத் தேர்வும் நடத்தப்படாது. சேர்க்கை முழுவதும் வெளிப்படையாக, குலுக்கல் முறையில் மட்டுமே நடைபெறும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியானதும், பெற்றோர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, சேர்க்கைக்கான கட்டணத்தைச் செலுத்தி தங்கள் குழந்தைகளின் இடங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

புதிய தேசிய கல்விக் கொள்கை விதிகளின்படி, மார்ச் 31, 2026 அன்றுள்ளபடி மாணவர்களுக்கான வயது வரம்பு பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் கீழ்க்காணும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
குலுக்கல் முறை நிறைவடைந்த பிறகு, தற்காலிகத் தேர்வுப் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற விவரங்களுக்கு: kvsangathan.nic.in