இந்திய ரயில்வே துறையில் பணித்திறன் மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் வகையில், ஆறு உயர் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்திய ரயில்வே நிறுவனக் குறியீடு விதி 1802(a)-ன் கீழ், பொது நலன் கருதி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக திறமையின்மை மற்றும் மெத்தன போக்கை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்ற வலுவான செய்தியை இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் ஊழியர்களுக்கு உணர்த்தியுள்ளது.
மறுபுறம், ரயில்வே பாதுகாப்பை உறுதி செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் போன்ற நவீன தொழில்நுட்பங்களை ரயில்வே தீவிரமாக புகுத்தி வருகிறது. குறிப்பாக, பனிமூட்ட காலங்களில் ஓட்டுநர்களுக்கு உதவும் 'ட்ரை-நேத்ரா' அமைப்பு, தண்டவாளங்களைக் கண்காணிக்கும் ஐடிஎம்எஸ் மற்றும் நகரும் ரயில்களில் உள்ள குறைபாடுகளை கண்டறியும் எம்விஐஎஸ் போன்ற கருவிகள் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிர்வாக ரீதியான ஒழுங்குமுறை மற்றும் தொழில்நுட்ப ரீதியான நவீனமயமாக்கல் என இருமுனை வியூகங்களுடன் இந்திய ரயில்வே தனது செயல்பாடுகளை மேம்படுத்தி வருகிறது.
Edited by Siva