அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தம்பி தனுஷ் நடித்து 2006ம் வருடம் வெளியான திரைப்படம்தான் புதுப்பேட்டை. வடசென்னை பகுதியில் வசிக்கும் ரவுடிகளின் வாழ்க்கை மையமாக வைத்து இந்த படத்தின் கதை, திரைக்கதையை செல்வராகவன் உருவாக்கியிருந்தார். இந்த படத்தில் சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்..
அதேநேரம் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்க வில்லை. எனவே, இப்படத்தை தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம். ஆனாலும் இந்த படத்திற்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.. கடந்த 20 வருடங்களாகவே புதுப்பேட்டை 2 எப்போது எடுப்பீர்கள் என செல்வராகவனிடம் அவர்கள் தொடர்ந்து கேட்டு நச்சரித்து வருகிறார்கள்.
5 வருடங்களுக்கு முன்பு புதுப்பேட்டை 2 துவங்குவதாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டார் செல்வராகவன். இதையடுத்து தனுஷ் ரசிகர்கள் ஆர்வமனார்கள்.. ஆனால், அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் புதுப்பேட்டை 2 படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டதாக செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்..
இதையடுத்து, போஸ்டர் வந்து 5 வருஷமாச்சி.. இப்பதான் கதையை எழுதி முடிச்சிருக்காறாம்’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல், புதுப்பேட்டை படத்தில் வரும் ‘அத உள்ள வை குமாரு’ என்கிற காட்சியை மீம்ஸாக போட்டு செல்வராகவனை கலாய்த்து வருகிறார்கள்.