இன்னும் 4 நாட்களில்.. தேதி குறித்த எடப்பாடி பழனிச்சாமி.. ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா.!
Tamilspark Tamil March 20, 2026 04:48 PM

Tamilnadu State Election 2026: அதிமுக, பாஜக கூட்டணி இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

2026 தேர்தல்:

தமிழக தேர்தல் அரசியல்களம் 2026 தேர்தலை முன்னிட்டு விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடியும் தேர்தல் பணிக்காக 20,000 துணை இராணுவப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்குமுனைப்போட்டி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதனிடையே, மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பின் உறுதி செய்யப்பட்ட அதிமுக - பாஜக கூட்டணி இடையே அதிகாரபூர்வமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: Edappadi Palanisamy: அரசு ஊழியர்களுக்கு மிட்டாய் கொடுத்த திமுக அரசு - எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் தாக்கு.!

எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா சந்திப்பு:

அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லிக்கு சென்று இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது, தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதிக்கட்ட முக்கிய ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்தபடி எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நாளை (மார்ச் 21) தொடங்கும். இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வருகிறார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது. கூட்டணி தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரிந்துவிடும். தொகுதிப்பங்கீடு பேச்சுவார்தைகுப்பின்னர் யாருக்கு எந்த தொகுதி என அறிவிக்கப்படும். தமிழக வெற்றிக்கழகத்துடன் நாங்களோ அவர்களோ கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதிமுகவுடன் சேரவேண்டியவர்கள் சேர்ந்துவிட்டார்கள். இனி புதியவர்களுக்கு வாய்ப்பில்லை" என பேசினார்.

இதையும் படிங்க: TVK Vijay Vs Edappadi Palanisamy: 'விஜய் ஒரு ஊழல்வாதி' - எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்.!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.