இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் ஆதார் செயலி கட்டாயம்? மத்திய அரசின் அதிரடி..!
WEBDUNIA TAMIL March 20, 2026 03:48 PM

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன்களில் 'ஆதார்' செயலியை முன்கூட்டியே நிறுவுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 1.34 பில்லியன் குடிமக்களின் தரவுகளை கொண்ட ஆதார் செயலியை, கடிகாரம் அல்லது கால்குலேட்டர் போல போன்களில் ஒரு அங்கமாக மாற்ற UIDAI திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் குடிமக்கள் எளிதாக தரவுகளை புதுப்பிக்க முடியும் என அரசு கூறுகிறது.

இருப்பினும், ஆப்பிள், சாம்சங் மற்றும் கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தகைய கட்டாயம் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவை வாதிடுகின்றன.

மேலும், இந்தியாவிற்கென தனியாக உற்பத்தி முறைகளை மாற்றியமைப்பது கடினம் எனவும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே 'சஞ்சார் சாதி' செயலி விவகாரத்தில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது ஆதார் உட்பட ஆறு அரசு செயலிகளை முன்கூட்டியே நிறுவும் திட்டத்திற்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது.

ரஷ்யாவை தவிர வேறு எந்த ஜனநாயக நாடுகளும் இத்தகைய நடைமுறையை கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.